CUET 2022 – ஏப்ரல்
2 முதல் விண்ணப்பிக்கலாம்
மத்திய
பல்கலைக்கழகங்களில் இளங்கலை
படிப்புக்கான மாணவர்
சேர்க்கைக்கு யுஜிசி
புதிதாக கொண்டு வந்துள்ள
பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் ஏப்ரல்
2 ஆம் தேதி முதல்
வழங்கப்படவுள்ளதாக தேசிய
தேர்வு முகமை அறிவித்துள்ளது.
விண்ணப்ப
படிவம் பெறுவதற்கான கடைசி
தேசி ஏப்ரல் 30 எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் பல்கலைகழகங்கள் வழங்கும்
படிப்பில் சேர்வதற்கான தகுதி
விவரங்களை செக் செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு என்டிஏ
அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள்
படிப்பையும், பல்கலைக்கழகத்தையும் தேர்ந்தெடுத்த பிறகு, CUET இணைத்தளத்திற்கு (https://cuet.samarth.ac.in) சென்று,
விண்ணப்ப படிவத்தை சப்மிட்
செய்ய வேண்டும்.
மல்டிபிள்
சாய்ஸ் வினாத்தாள் உட்பட
முழு தேர்வு செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை
முதல் வாரத்தில் நடைபெறவிருக்கும் நுழைவுத் தேர்வு
குறித்து தேர்வர்களிடம் ஏற்படும்
பொதுவான சந்தேகங்களுக்கான பதிலை
இந்தியன் எக்ஸ்பிரஸ் இங்கு
கொண்டு வந்துள்ளது.
பொது நுழைவுத் தேர்வு பார்மட் என்ன?
இந்த
தேர்வு, NCERT 12 ஆம்
வகுப்பின் பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டது. மொத்தம் 4 பகுதிகள்
உள்ளன. IA மற்றும் IB ஆகிய
பிரிவுகளில், மொழிகளுக்கான தாள்களுக்கு தேர்வர்கள் பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் 50 கேள்விகள்
இருக்கும், அதில் ஒருவர்
குறைந்தது 40 கேள்விகளுக்கு பதிலளிக்க
வேண்டும். இந்த மொழித்
தேர்வானது, உண்மை, இலக்கியம்
மற்றும் கதை பத்திகளின் அடிப்படையில் தேர்வரின்
மொழித் திறனை சோதிப்பது
ஆகும். கேள்விகளை நன்கு
புரிந்து மல்டிபிள் சாய்ஸ்
வினாக்களுக்கு தேர்வர்கள் பதிலளிக்க வேண்டும்.
ஏன் மொழிகளில் இரண்டு பிரிவு உள்ளன?
பிரிவு
IA அனைவரும் கட்டாயமாக எழுத
வேண்டும். இதில் தேர்வரை
சோதிக்க அவரது ஆங்கில
மொழி திறனையோ அல்லது
இந்தி, மராத்தி, குஜராத்தி,
தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், உருது, அஸ்ஸாமி,
பெங்காலி, பஞ்சாபி, ஒடியா
ஆகிய 12 பிராந்திய மொழிகளில்
ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கு அளிக்கப்பட்டுள்ள நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.
பிரிவு
IB என்பது வெளிநாட்டு மொழிகளில்
இளங்கலை பட்டப்படிப்புகளை தொடர
விரும்புபவர்களுக்கானது. பிரஞ்சு,
ஸ்பானிஷ், ஜெர்மன், நேபாளி,
பாரசீகம், இத்தாலியன், அரபு,
சிந்தி, காஷ்மீரி, கொங்கனி,
போடோ, டோக்ரி, மைதிலி,
மணிப்பூரி, சந்தாலி, திபெத்தியன், ஜப்பானியம், ரஷ்யன் மற்றும்
சீனம் ஆகிய 19 மொழிகளின்
பட்டியலிலிருந்து மாணவர்கள்
தேர்வு செய்துக்கொள்ளலாம். ஆனால்,
இவை குறிப்பிட்ட சில
மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே
கற்றுத்தரப்படுகிறது.
மற்ற இரண்டு பிரிவுகள் சொல்வது என்ன?
தேர்வில்
பிரிவு II-இல், இளங்கலை
படிப்பில் மாணவர் சேர
விரும்பும் படிப்பு தொடர்பான
கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
இதற்காக
27 பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில்,
மாணவர்கள் தாங்கள் சேர
விரும்பும் படிப்புக்கு தொடர்புடைய 6 பாடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில்,
கணக்கியல்/ புத்தக பராமரிப்பு, உயிரியல்/ உயிரியல் ஆய்வுகள்/
பயோடெக்னாலஜி, பிசினஸ்
படிப்பு, வேதியியல், கணினி
அறிவியல்/ தகவல் நடைமுறைகள், பொருளாதாரம்/ வணிகப் பொருளாதாரம், பொறியியல் கிராபிக்ஸ், தொழில்முனைவு, வரலாறு,ஹோம் சைன்ஸ்,
இந்தியாவின் பாரம்பரிய நடைமுறை,
சட்டப் படிப்புகள், வணிகக்
கலைகள், கணிதம், உடற்கல்வி/
என்சிசி, இயற்பியல், அரசியல்,
உளவியல், சமூகவியல், கற்பித்தல் திறன், விவசாயம், ஊடகம்,மாஸ்
கம்யூனிகேஷன், ஆந்த்ரோபாலஜி, பைன் ஆர்ட்ஸ் / ஓவியம்,
கலை மற்றும் சமஸ்கிருதம் என 27 டொமைன்கள் உள்ளன.
தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் 6 பாடத்திலிருந்து கேட்கப்படும் 50 கேள்விகளில் 40க்கு கட்டாயம் பதில்
அளித்திருக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கான நேரம்
45 நிமிடங்கள் ஆகும்.
தேர்வில்
பிரிவு III என்பது, இளங்கலை
படிப்புக்கு தேவையான பொது
அறிவை சுட்டிக்காட்டுகிறது. சில
படிப்புகளுக்கு பாடப்புத்தகத்தின் மதிப்பெண்கள் காட்டிலும், பொது அறிவு திறன்
அடிப்படையில் தான்
மாணவர் சேர்க்கை தேவைப்படும். எனவே, அத்தகைய படிப்புகளுக்கு மட்டுமே தேர்வர்கள் இதனை
எழுத வேண்டும். இந்த
தேர்வானது பொது அறிவு,
நடப்பு விவகாரங்கள், பொது
மன திறன் மற்றும்
எண் திறன் ஆகியவற்றை
மதிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தேர்வுக்கான நேரமாக 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில்,
8 ஆம் வகுப்பு வரை
கற்பிக்கப்படும் Arithmetic/algebra
geometry/mensuration/stat போன்ற quantitative
reasoning கேள்விகளும், பகுப்பாய்வு கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். மொத்தமாக
75 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில்,
60 கேள்விகளுக்கு பதிலளிக்க
வேண்டும்.
தேர்வர் எத்தனை தாள்களை தேர்வு செய்யலாம்?
என்டிஏ
அறிக்கையின்படி, தேர்வர்கள் இரண்டு காம்பினேஷன்களில் ஒன்பது
தாள்கள் வரை தேர்ந்தெடுக்கலாம்.
முதல்
காம்பினேஷனில், ஒரு
தேர்வர் பிரிவு IA மற்றும்
IB ஆகியவற்றில் இரண்டு மொழித்
தாள்களை எடுக்கலாம். அதில்,
ஆறு டொமைன் பாடங்களையும், பொதுஅறிவு தேர்வையும் செலக்ட்
செய்யலாம். 2ஆவது காம்பினேஷனில் ஒருவர் மூன்று மொழிகள்
வரை தேர்ந்தெடுக்கலாம். அதில்,
ஐந்து டொபைன் பாடங்களும், பொது அறிவு சோதனையும்
இடம்பெற்றிருக்கும்.
27 டொமைன் பாடங்களில் ஒருவர் விரும்பிய பாடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
இதுபோன்ற
சந்தர்ப்பங்களில், தேர்வர்
தங்கள் விருப்பத்திற்கு நெருக்கமான பாடத்தை தேர்வு செய்யலாம்
என்று NTA கூறுகிறது. உதாரணமாக,
உயிர் வேதியியலில் பிஎஸ்சி
படிக்க விரும்புபவர்கள் உயிரியலை
தேர்வு செய்யலாம். பொதுவாக,
தேர்ந்தெடுக்கப்படும் மொழி
அல்லது பாடமானது, அந்த
தேர்வர் தனது பன்னிரண்டாம் வகுப்பு வாரியத் தேர்வில்
தேர்வு செய்ததாக இருக்க
வேண்டும்.
எந்தவொரு
பல்கலைக்கழகமும் இது
சம்பந்தமாக ஏதேனும் தளர்வை
அனுமதித்தால், அது
CUET (UG) -2022 இன் கீழும் பயன்படுத்தப்படலாம். இது தொடர்பாக
பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களின் தகுதித் தேவைகளை
விண்ணப்பதாரர்கள் கவனமாகப்
பார்த்து அப்ளை செய்ய
வேண்டும் என என்டிஏ
கூறுகிறது.
முந்தைய ஆண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் இந்தாண்டு CUET எழுதலாமா?
முந்தைய
ஆண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற மாணவர்களை
நடப்பு ஆண்டில் சேர்க்கைக்கு ஏதேனும் பல்கலைக்கழகம் அனுமதித்தால், அவர்களும் அதில் கலந்துகொள்ள தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
பல்கலைக்கழகங்கள் எவ்வாறு தகுதிப் பட்டியல்களைத் தயாரித்து மாணவர்களை சேர்க்கும்?
CUET மாணவர்களுக்கு மதிப்பெண்களை மட்டுமே
வழங்கும். அது தரவரிசைப்படுத்தாது. தேர்வில் ஒவ்வொரு
தவறான விடைக்கும் நெகட்டிவ்
மதிப்பெண்கள் இருக்கும்.
12ஆம் வகுப்பு வாரியத்
தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த பங்கும் வகிக்காது.
இருப்பினும், வாரியத் தேர்வு
மதிப்பெண்களை ஒரே
கணக்கில் பயன்படுத்த பல்கலைக்கழகங்களுக்கு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.
உதாரணமாக,
ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகம் CUET இல் ஒரு
விண்ணப்பதாரரின் மதிப்பெண்ணைப் பொருட்படுத்தாமல், வாரியத்
தேர்வுகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம்
மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டும்
சேர்க்கைக்கான விண்ணத்தை
பரிசீலிக்கலாம். இருப்பினும்,இது பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழகம் மாறுபடும். அனைவரும் அதை
ஒரு தகுதி அளவுகோலாகப் பயன்படுத்த மாட்டார்கள். இந்த
அம்சங்களை தேர்வர்கள் தாங்கள்
விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகங்களில் உள்ளதா என்பதை
சரிபார்க்க வேண்டும்.
CUET தேர்வுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வேணுமா?
இந்த
நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளும் 12 ஆம்
வகுப்பு பாட மட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டிருக்கும். எனவே,
12ஆம் வகுப்பு வாரிய
பாடத்திட்டத்தைப் படித்த
மாணவர்கள் CUET தேர்வில் சிறப்பாகச் செயல்பட முடியும்.
NCERT
பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் வரையப்படும் என்பதால்
சிறப்பு பயிற்சி தேவையில்லை என்று யுஜிசி தலைவர்
எம்.ஜெகதேஷ் குமார்
வலியுறுத்தியுள்ளார்.
பேராசிரியர் குமார் கூறுகையில், இந்த
தேர்வு ஐஐடி தேர்வு
போல் இருக்காது. வல்லுநர்கள் தேர்வின் கடின அளவை
கட்டுப்படுத்தவார்தகள். அனைத்து
கேள்விகள் 12 ஆம் வகுப்பு
பாடத்திட்டத்தில் மட்டுமே
இருக்கும்.
IIT
நுழைவுத் தேர்வில், சுமார்
16,000 இடங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும், மத்தியப்
பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, டெல்லி பல்கலைக்கழகத்தில் மட்டும்
சுமார் 70,000 இடங்கள் உள்ளன.
அதவாது மொத்தமாக 45 பல்கலைக்கழகங்களையும் கணக்கில் கொண்டால்,
2 லட்சத்திற்கும் அதிகமான
இடங்கள் உள்ளன.. கடினமான
கேள்விகள் பயிற்சி மையங்களை
நோக்கி செல்ல மாணவர்களை
தூண்டுகிறது. ஆனால், ஆனால்
CUCETல், சிறப்பு வகுப்புகள் இல்லாமல் மாணவர்கள் சிறப்பாக
செயல்படும் வகையில் கேள்வியின் கடின அளவு கட்டுக்குள் இருக்கும் என்றார்.