ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு (CTET) விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம்,
மத்திய ஆசிரியர் தகுதித்
தேர்வு (CTET) 2021 க்கான
தேர்வு தேதிகள் வெளியாகியுள்ளது.
அறிவிப்பின் படி, CTET தேர்வு இந்த
ஆண்டு டிசம்பர் 16 முதல்
அடுத்த ஆண்டு ஜனவரி
13, வரை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான
விரிவான அட்டவணை கடந்த
மாதம் 9-ம் தேதி
மத்திய இடைநிலைக் கல்வி
வாரியத்தின் https://ctet.nic.in/WebInfo/Page/Page?PageId=1&LangId=P
என்ற இணையதளத்தில் வெளியிடப்படது.
CBSE, கணினி
அடிப்படையிலான தேர்வு
முறையில் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வின் 15 வது
பதிப்பை நடத்தவுள்ளது. நாடு
முழுவதும் 20 மொழிகளில் இந்த
தேர்வு நடைபெறும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த
மத்திய ஆசிரியர் தகுதி
தேர்வுக்கு கடந்த 9ம்
தேதி முதல் விண்ணப்பம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி இன்று இரவுடன்
முடிவடைய உள்ள நிலையில்
தேர்வுக்கான கால அவகாசம்
தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
தேர்வர்கள் தேர்வுக்கு வருகின்ற
25 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் வரும் 28 முதல் நவம்பர்
3-ம் தேதி வரை
திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
General and OBC விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம்
ஒரு தாளுக்கு ரூ.1000
மற்றும் இரண்டு தாள்களுக்கும் ரூ.1200 செலுத்த வேண்டும்.
மேலும் SC/ ST/ PwD விண்ணப்பதாரர்களுக்கு, ஒரு தாளுக்கு
விண்ணப்ப கட்டணம் ரூ.500
மற்றும் இரண்டு தாள்களுக்கும் ரூ.600 என கட்டணம்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Notification: Click
Here