சி.எஸ்.,
படித்தவர்கள் பிஎச்.டி.,
சேரலாம்
இந்திய
நிறுவன செயலருக்கான, சி.எஸ்.,
தேர்ச்சி பெற்றவர்கள், சட்ட
பல்கலையில் பிஎச்.டி.,
படிப்பில் சேரலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகவியல்
சார்ந்த சி.ஏ.,
மற்றும் சி.எஸ்.,
படிப்புகள், முதுநிலை படிப்புகளுக்கு இணையாக கருதப்படுகின்றன. இவற்றின்
தேர்ச்சி சான்றிதழ்களை, முதுநிலை
படிப்புக்கு நிகரானதாக கருத,
பல்கலை மானிய குழுவான
யு.ஜி.சி.,
அனுமதி அளித்துள்ளது.இதன்படி,
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், ‘கம்பெனி
செக்ரட்ரிஷிப்‘ என்ற
சி.எஸ்., படிப்புக்கு, முதுநிலை படிப்புக்கு இணையான
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.,
முடித்தவர்களை, பிஎச்.டி.,
படிக்க அனுமதிக்கலாம் என்று
சட்ட பல்கலை அறிவித்து
உள்ளது.இது குறித்து,
சட்ட பல்கலையும், இந்திய
நிறுவன செயலக அமைப்பும்
இணைந்து, இரு தரப்பு
மாணவர்களுக்கும் பல்வேறு
பயிற்சிகள் அளிக்க உள்ளன.
சட்ட பல்கலையில் எல்.எல்.பி.,
படிப்புடன் பி.காம்.,
ஐந்து ஆண்டு படிப்பு
தேர்வில், முதல் மூன்று
இடங்களை பெறுவோருக்கு, இந்திய
நிறுவன செயலக அமைப்பின்
சார்பில் தங்க பதக்கம்
மற்றும் விருது வழங்கப்படுகிறது.
மேலும்,
அவர்கள் சி.எஸ்.,
‘எக்ஸ்கியூட்டிவ்‘ படிப்பில்
சேர, பதிவு கட்டண
சலுகையும் வழங்கப்படுகிறது.