HomeBlogதமிழ்நாடு வேளாண் பல்கலையில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு கலந்தாய்வு
- Advertisment -

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு கலந்தாய்வு

Counseling for Diploma in Horticulture, Agricultural Engineering in Tamil Nadu Agricultural University

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண்
பல்கலை செய்திகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு
கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்
வேளாண்
தோட்டக்கலை
மற்றும்
வேளாண்
பொறியியல்
போன்ற
பட்டயப்படிப்புகளுக்கு
2022-2023
ம்
கல்வியாண்டிற்கு
2036
விண்ணப்பங்கள்
பெறப்பெற்றன.

இவற்றில் 2025 விண்ணப்பங்கள்
தகுதியானவைகளாக
கருதப்பட்டு
அவற்றுக்கான
தரவரிசைப்பட்டியல்
கடந்த
27
ம்
தேதி
https://tnau.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA2NQ==
என்ற
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான
கலந்தாய்வு
கடந்த
28
ம்
தேதி
துவங்கியது.

இன்று (30ம் தேதி) வரை நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வில்
விண்ணப்பதாரர்கள்
மேற்குறிப்பிட்ட
இணையதள
முகவரியில்
மாலை
5
மணிக்குள்
கல்லூரி
மற்றும்
பாட
விருப்பங்களை
மாற்றிக்கொள்ளலாம்.
கடைசியாக
உறுதி
செய்யப்பட்ட
விருப்பம்,
கல்லூரி
மற்றும்
பாட
இட
ஒதுக்கீட்டிற்கு
பரிசீலிக்கப்படும்.

இது குறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதார்களின்
மின்னஞ்சல்
முகவரிக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
இந்த
கலந்தாய்வின்
போது
விண்ணப்பதாரர்கள்
எந்தவித
கட்டணமும்
செலுத்த
வேண்டியதில்லை.
சான்றிதழ்
சரிபார்ப்பின்
போது
கட்டணம்
பெற்றுக்கொள்ளப்படும்.

வரும் பிப்ரவரி 1ம் தேதி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்
நடைபெறும்
கலந்தாய்விற்கான
வழிமுறைகள்
மற்றும்
சான்றிதழ்
சரிபார்ப்புக்கு
அழைக்கப்பட்ட
மாணவர்
விவரங்களை
https://tnau.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA2NQ==
என்ற
இணையதளம்
வாயிலாக
தெரிந்துகொள்ளலாம்.

விபரங்களுக்கு
0422-6611345
என்ற
தொலைபேசி
மூலமாகவும்,
ugadmission@tnau.ac.in
என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -