சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி கட்டணம் 18,750 ரூபாய் ஆகும். குறிப்பாக தமிழில் மட்டுமே பயிற்சி வழங்கப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் பிராட்வே, தேனாம்பேட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய மூன்று பயிற்சி நிலையங்களில் நடைபெறும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.