தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கோவை தயார் நிலை உணவு தயாரிக்கும் பயிற்சி அக்., 4,5ம் தேதிகளில் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
பல்கலையில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் வழங்கப்படும் இந்த பயிற்சியில், தோசை மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், அடை மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், சூப் மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ் மற்றும் பாதம் கீர் மிக்ஸ் உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் தயாரிக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள், 94885 18268 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.