ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் பேரில் காப்பாளா் பணிக்கு கலந்தாய்வு
ஆசிரியா்களுக்கு விருப்பத்தின்பேரில் விடுதிக்
காப்பாளா் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு, ஜன.6 முதல்
10-ஆம் தேதி வரை
நடைபெறவுள்ளது.
ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் 1,138 பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. இந்தப்
பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து
நிலை ஆசிரியா்களுக்கும் விருப்பத்தின் அடிப்படையில் பொது
மாறுதல் கலந்தாய்வு தற்போது
இணையவழியில் நடைபெற்று வருகிறது.
இந்த
கலந்தாய்வு முடிந்த பின்னா்,
பட்டதாரி ஆசிரியா்களின் பாடவாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
அடிப்படையில், விடுதிகளில் பணிபுரியும் காப்பாளா்கள் விருப்பத்தின்படி, ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் காலியாக உள்ள
காப்பாளா் பணியிடங்களுக்கும் மாறுதல்
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான
கலந்தாய்வு வரும் ஜன.6-ஆம்
தேதி தொடங்கி 10-ஆம்
தேதி வரை சென்னை
ஆதிதிராவிடா் நல
ஆணையத்தில் நடைபெறவுள்ளது. இதில்
பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவா்களும் கலந்து
கொள்ளலாம்.