கலை மற்றும்
அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் – AICTE
கடந்த
1986ம் ஆண்டு இந்தியாவில் இறுதியாக உருவாக்கப்பட்ட தேசிய
கல்விக் கொள்கைக்கு மாற்றாக
மத்திய அரசு 2020-ஆம்
ஆண்டு புதிய கல்விக்
கொள்கையை அறிமுகப்படுத்தியது. அனைத்து
குழந்தைகளும் தங்களின்
குடும்ப சூழ்நிலை காரணமாக
படிப்பிலும் வாய்ப்புகளையும் இழக்கக்கூடாது என்பதை நோக்கமாக புதிய
கல்விக் கொள்கை கொண்டுள்ளது.
புதிய
கல்விக்கொள்கையின் அடிப்படையில், அனைத்து படிப்புகளுக்கும் நுழைவு
தேர்வு முறையில் மாணவர்
சேர்க்கை நடக்க வேண்டும்
என்பதை அமல்படுத்த மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனேவே
மருத்துவத் துறையின் இளநிலை
படிப்புகளுக்கு நீட்
தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு
ஆண்டு முதல் துணை
மருத்துவ படிப்புகளும் நீட்
தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கலை
மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இனிமேல் நுழைவுத்தேர்வுகள் முறை மூலம்
தான் மாணவர் சேர்க்கை
நடத்தப்படும் என்று
ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
தற்போது அகில இந்திய
தொழிநுட்ப கவுன்சிலின் தலைவர்
அனில் சகஸ்புரத்தே அவர்கள்
வரும் புதிய கல்வி
ஆண்டு முதல் கலை,
அறிவியல் உள்ளிட்ட அனைத்து
உயர்கல்வி படிப்புகளுக்கும் நீட்
தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.