Friday, April 25, 2025
HomeBlogபோட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு ஒரு குட்டி டிப்ஸ்.. படிப்பதற்கு உகந்த நேரம் எது?
- Advertisment -

போட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு ஒரு குட்டி டிப்ஸ்.. படிப்பதற்கு உகந்த நேரம் எது?

STUDY2BPLAN2BTIPS Tamil Mixer Education

எந்த நேரத்தில், எப்படி படித்தால் (Time Management) போட்டித்தேர்வை எதிர்கொள்ள முடியும், எந்த பாடங்களை எப்படி படிக்க வேண்டும் (How To Study) என்பது பற்றி இங்கு காணலாம்.

அடுத்தடுத்து போட்டித்தேர்வுகள்

TNPSC, SSC, TNUSRB, RRB, வங்கிப்பணி உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு தயாராவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.. அதே நேரத்தில் அதற்கு ஈடாக மத்திய, மாநில அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுத் துறைகளில் SSC, RRB, UPSC மூலம் மட்டும், சுமார் 1 லட்சத்து 34 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதே போல், தமிழக அரசு துறைகளிலும் டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்சி மூலம் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், போட்டித்தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும், எந்த நேரத்தில் படிக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்ப்போம்.

Morning Study Time:

அதிகாலை நேரத்தில்: பொதுவாக அதிகாலை நேரத்தில் படிப்பது சிறந்தது என்பது பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் படிப்பதற்கு ஏற்ற நேரம் என்பது, ஒவ்வொருவருடைய மனநிலை, அவர்கள் படிக்கும் விதத்தைப் பொறுத்தும் அமைகிறது. சிலருக்கு இரவு நேரங்களில் படிப்பது தான் பிடிக்கும். அப்போது படித்தால் தான் ஞாபகம் இருக்கும் என்று எண்ணுவார்கள்.

இன்னும் சிலருக்கு காலை முதல் மதியம் வரையில் படிப்பதற்கு வசதியாக இருக்கும். மதிய வேளைக்குப் பிறகு தூக்கம் வந்து விடும். எனவே, அதற்குள்ளாக படித்து முடிப்பர். சிலர், மதிய உணவுக்குப் பின் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, படிப்பர். மாலை முதல் இரவு வரையில் அட்டவணையிட்டு படிப்பர். எனவே, படிப்பதற்கான நேரம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தும் அமைகிறது.

Wake Up in Early Morning (ஒவ்வொரு நாளின் வெற்றி!)

ஒரு நாளின் பொழுது எவ்வாறு அமைகிறது என்பது, அந்த நாளில் நாம் எப்போது எழுகிறோம் என்பதை பொறுத்தும், என்ன வேலையை செய்யத் தொடங்கிறோம் என்பதை பொறுத்தும் உள்ளது. அதிகாலையில் தூய்மையான காற்று, அமைதியான சூழல் ஆகியவை நாம் எந்த காரியம் செய்தாலும், அதன் முழு பலனையும் அடைய முடியும். பொதுவாக காலையில் 4 மணிக்கு எழுந்து, 5 மணிக்குள்ளாக படிக்கத் தொடங்க வேண்டும். அந்த நாள் முழுவதும் படித்தவற்றை மனதில் திரும்ப திரும்ப சொல்லிப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஏதோ படிக்கிறோம் என்று அலட்டிக்கொள்ளாமல், நல்ல கவனத்துடன், ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.

காலையில் என்னென்ன பாடங்கள் படிக்கலாம்?

அதிகாலை நேரங்களில் அறிவியல், சமூக அறிவியல், பொது அறிவு பாடங்களைப் படிக்கலாம். குறிப்பாக மொழிப்பாடங்கள் படித்தால் நன்றாக நினைவில் நிற்கும். அறிவியலில் கணிதம் சம்பந்தப்பட்ட பிரிவுகளை தவிர்த்து மற்றவற்றை படிக்கலாம்.

வரலாறு பாடங்களை படிக்கும் போது, காலக்கோடு (Time Line), ஆண்டுகள், சிறப்புகள் போன்றவற்றை மனிதில் திரைப்படம் போன்று ஓடவிட்டு படிக்க வேண்டும். படித்தப்பின்பு, மீண்டும் ஒரு முறை வாசித்துக் கொள்ளவும்.

Time Management (கணிதம், அறிவியல் பாடங்களில்:)

கணிதம், அறிவியில் கடினமான பகுதி போன்றவற்றை மாலை முதல் இரவு வரையில் படிக்கலாம். குறிப்பாக கணித பாடத்தை புரிந்து, படிக்கும் போது ஆர்வக்கோளாறு காரணமாக அதிக நேர விரயம் எடுத்துக்கொள்ளும். எனவே, சூத்திரங்கள், கணித வழிமுறை போன்றவற்றுக்கு அதிக நேரங்கொடுக்காமல், குறைந்த நேரத்தில், தீர்வு காண்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். முந்தைய போட்டித்தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு குறைந்த நேரத்தில் தீர்வு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். கணிதத்தில் ஒரு கேள்விக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அதைத் தொடர்ந்து வரும் எளிமையான தெரிந்த கேள்விக்கு, நேரம் இல்லாமல், பதற்றத்தில் தவறாக பதிலளிக்க நேரிடும். எனவே, கணித பாடத்தைப் பொறுத்த வரையில், அதிக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய வேளையில் என்ன படிக்கலாம்?

பலருக்கு மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவது இயல்பு தான். ஆனால், போட்டித்தேர்வை மனதில் கொண்டு, தூக்க எண்ணத்தில் இருந்து வெளியே வரவேண்டும். இம்மாதிரியான நேரங்களில் உயரியல் பாடங்கள், வேதியியல் பாடங்களை படிக்கலாம்.

உயிரியல் பாடங்களில் படம் வரைவது, அறிவியல் பெயர் வரலாறு போன்றவற்றை தாளில் எழுதி, வரைந்து பார்க்கலாம். உயரியல் பாடங்களில் படம் வரைவதன் மூலம், அந்த குறிப்பிட்ட பாடத்தை மிகச்சுருக்கமாக மனிதில் பதிய வைத்துக் கொள்ள முடியும்.
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -