Wednesday, December 18, 2024
HomeBlogவேடிக்கை மற்றும் கேலிச்சித்திரப் போட்டி
- Advertisment -

வேடிக்கை மற்றும் கேலிச்சித்திரப் போட்டி

 

Comic-and-cartoon-competition-2021

வேடிக்கை மற்றும்
கேலிச்சித்திரப் போட்டி

ஐக்கிய
நாடுகளின் பெண்கள் அமைப்பு,
ஐரோப்பிய ஆணையம், பெல்ஜியம்,
பிரான்சு, மெக்சிகோ ஆகியவை
இணைந்து உலகளாவிய வேடிக்கை
மற்றும் கேலிச்சித்திரப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.

பெய்ஜிங்
பிரகடனத்தின் 25ஆம்
ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பெறும் இப்போட்டியில் பாலினச்
சமத்துவத்தில் நம்பிக்கையுடையவர்கள், எதிர்காலத்திற்கான பெண்களின் சமமான உரிமைகளை
உணர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

பெண்கள்
மற்றும் சுற்றுச்சூழல்,   அதிகாரம் மற்றும்
முடிவெடுக்கும் திறனில்
பெண்கள், 
பெண் குழந்தை,  பெண்கள் மற்றும்
பொருளாதாரம்,  
பெண்கள் மற்றும் வறுமை,  பெண்களுக்கு எதிரான
வன்முறை உள்ளிட்ட  12 தலைப்புகளில் படங்கள்
வரையலாம்.

விதிமுறைகள்:-

இப்போட்டியில் பங்கேற்பவர்கள் 18-1-2021 அன்று
18
வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்களாக இருக்க
வேண்டும். 
சட்டப்படியான பெயர்களிலேயே படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  வரையும் படத்தில்
சொற்கள் எதுவும் இருக்கக்
கூடாது.    

வரையும்
படம் 4 (210 மி.மீ
297 மி.மீ)
அளவிலான தாளில் அமைய
வேண்டும். நீளவாக்கிலோ அல்லது
படுக்கைவாக்கிலோ இருக்கலாம். வரையும் படம், பல
படங்களைக் உள்ளடக்கியதாக இருந்தால்
படங்களின் எண்ணிக்கை ஆறு
பெட்டிகளுக்கு அதிகமின்றி 4 தாள் அளவிலேயே
இருக்க வேண்டும். 

படத்தின்
பிரிதிறன் அளவு 150 டிபிஐ
அல்லது அதற்கு அதிகமானதாக இருக்க வேண்டும். படம்  jpg, jpeg, png மற்றும் pdf கோப்புகளாக அமைய வேண்டும்.

சமர்ப்பிக்கப்படும் படம் உண்மையானதாகவும், இதுவரை வேறு எந்தவொரு
ஊடகத்திலும் வெளியிடப்படாததாகவும் இருக்க
வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய 
கடைசி நாள்: 14-3-2021

பரிசுகள்:-

முதல்
பரிசு 1200, இரண்டாம் பரிசு
750,
மூன்றாம் பரிசு 500  ஈரோ டாலர்களாக
வழங்கப்படும். 

அவை
இந்திய ரூபாய் மதிப்பில்  முறையே,  ரூ.10,60,00 – ரூ.66,000
ரூ.44,000 ஆகும். 

இறுதி
மற்றும் அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பெற்ற படங்கள்
அனைத்தும் பாரிஸ் நகரில்
நடைபெறும் சமத்துவ மன்றத்தில் படம் சமர்ப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரியுடன் காட்சிப்படுத்தப்படும். போட்டிக்கான முடிவுகள் 2021-ஆம் ஆண்டு
மே மாதத்தில் வெளியிடப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -