TAMIL
MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
CBSE மாணவர்களுக்காக கல்லூரியில் சேர அவகாசம்
பிளஸ்
2 முடித்த மாணவர்கள் அரசு
கலை மற்றும் அறிவியல்
கல்லுாரிகளில் இளநிலை
பட்டப் படிப்பில் சேர
ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இதன்படி
163 அரசு கல்லுாரிகளுக்கு ஜூன்
22 முதல் ஆன்லைன் விண்ணப்ப
பதிவு நடந்து வருகிறது.
நேற்று முன்தினத்துடன் விண்ணப்ப
பதிவு முடிவதாக இருந்தது.இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி
வாரியமான CBSE.ல்
படித்த மாணவர்களுக்கு இன்னும்
தேர்வு முடிவுகள் வராததால்
விண்ணப்ப பதிவுக்கான அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:
CBSE
படித்த மாணவர்களும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்ற
நோக்கில் CBSE பிளஸ்
2 தேர்வு முடிவுகள் வரும்
நாளில் இருந்து ஐந்து
நாட்கள் வரையிலும் விண்ணப்ப
தேதி நீட்டிக்கப்பட்டுஉள்ளது.
இதன்படி
அரசு கலை அறிவியல்
கல்லுாரிகள் மற்றும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள்
தொடர்ந்து விண்ணப்பப் பதிவுசெய்யலாம்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் தரம்
குறைந்தால் புகார் அளிக்கலாம். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலையின் இணைப்பு
கல்லுாரிகளுக்கு ஒவ்வொரு
ஆண்டும் போல் இந்த
முறையும் மாணவர்களின் தேர்ச்சி
விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here