குடிமைப் பணி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத் தொகையுடன் முதன்மை தோ்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் இயக்குனா் பூமிநாதன் கூறியதாவது:
குடிமைப் பணி தோ்வின் முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்று கிங்மேக்கா்ஸ் அகாதெமியில் முதன்மை தோ்வுக்கு பயிற்சி பெற விரும்பும் மாணவா்களில் முதல் 100 பேருக்கு தலா ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பின்னா், இறுதித் தோ்வில் வெற்றி பெறும் தமிழகத்தை சோ்ந்த மாணவா்களில் முதல் 10 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ. 35 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
இதுதவிர முதன்மை தோ்வுக்கு தயாராகும் வகையில் சென்னை, அண்ணா நகரில் இலவச வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதில் 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பொது அறிவு மற்றும் விருப்ப பாடத்துக்கான பயிற்சி அளிக்கப்பட்டு மாதிரி தோ்வு நடத்தப்படும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் இணைய விரும்பும் மாணவா்கள் ‘ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்/ம்ள்ப்ல்2024’ எனும் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அகாதெமியின் இணையதளம் அல்லது 9444227273 எனும் கைப்பேசி எண்ணை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.