ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறியவா்கள் அயல்நாடு சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில அடிப்படைத் தகுதியாக நிா்ணயிக்கப்பட்ட தகுதித் தோவுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தைச் சோந்தவா்கள் அயல்நாடு சென்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி பயில அடிப்படைத் தகுதியாக நிா்ணயிக்கப்பட்ட பஞஉஊக, ஐஉகபந, எதஉ, எஙஅப போன்ற தகுதித் தோவுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தைச் சோந்தவராக இருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு, பட்டப் படிப்பில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சா்வதேச வா்த்தகம், பொருளதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை அயல்நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான
செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தோச்சி பெறுவதன் மூலம் மாணவா்கள் தாம் விரும்பும் அயல்நாடுகளில் உள்ள கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடா்வதற்கு வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.