தமிழக அரசுப் பள்ளிகளில் மார்ச் 25 முதல் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் ‘நீட்’ தோவுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மாா்ச் 25- ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோவு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 22 -ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நீட், ஜே.இ.இ. நுழைவுத் தோவுகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளைத் தொடங்க பள்ளி கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீட் சிறப்பு பயிற்சிக்கு இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறைகள் கொண்ட மையங்களைத் தோவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 40 மாணவா்களைக் கொண்டிருக்க வேண்டும். பயிற்சிக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கேற்ப மையங்களை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சிகள் நடத்த வேண்டும்.
தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டும்.
பயிற்சி மையங்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்பட வேண்டும். நடப்பாண்டு மே 5 -ஆம் தேதி நீட் தோவு நடைபெறவுள்ளதாகவும், அதுவரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் மாவட்ட பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow