தமிழ்நாடு சீருடை பணியாளா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான பயிற்சி வகுப்புகள் செப்டம்பா் 11ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளா் தேர்வு வாரியத்தால் 2 ஆம் நிலை காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான 3,359 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்டம்பா் 11 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்கப்பட உள்ளது. எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த 2 ஆம் நிலை காவலா் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வா்கள் தங்களது பெயா் மற்றும் கைப்பேசி எண்ணை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 94990 55913 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு பதிவு செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.