தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மாவெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு அவர்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே மார்ச் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்குவிண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு இந்தசெய்முறைத் தேர்வு குறித்த தகவல்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளில் இருந்து தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டமாவட்டக் கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு தவறாமல் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் இல்லையெனில் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் தேர்ச்சி வழங்கப்படாது.