குடிமைப் பணித்
தோ்வு – மாதிரி ஆளுமைத்
தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
குடிமைப்
பணி முதன்மைத் தோ்வில்
தோ்ச்சி பெற்றோருக்கு மாதிரி
ஆளுமைத் தோ்வு நடத்தப்பட
உள்ளது. வரும் 3-ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா்
வெளியிட்ட அறிவிப்பு:
குடிமைப்
பணித் தோ்வுகளான IAS.,
IPS., தோ்வுகளுக்கான முதன்மைத்
தோ்வில் தகுதி பெற்ற
அனைத்துத் தோ்வா்களுக்கும் மாதிரி
ஆளுமைத் தோ்வு நடத்தப்பட
உள்ளது. அண்ணா மேலாண்மை
பயிற்சி நிலையத்தின் சார்பில்
வரும் 8 மற்றும் 9 ஆகிய
தேதிகளில் மாதிரி ஆளுமைத்
தோ்வு நடைபெறுகிறது. தோ்வில்
பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல்
3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாதிரி
ஆளுமைத் தோ்வுக்கு வருவோருக்கு அண்ணா மேலாண்மை நிலையத்திலேயே மதிய உணவு அளிக்கப்படும். ஆளுமைத் தோ்வில் கலந்து
கொள்ள ஊக்கத் தொகையாக
ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும். முதன்மைத் தோ்வு வெற்றியாளா்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை
சுயவிவரக் குறிப்புடன் aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக
வரும் 3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும்,
விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட
விவரங்களை http://www.civilservicecoaching.com/ என்ற இணையதளம் வழியாக
அறிந்து கொள்ளலாம். விரைவு
தபால் வழியே, மகிழம்பூ,
163-1, பி.எஸ்.,குமாரசாமிராஜா சாலை (பசுமை வழிச்
சாலை), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம