நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற டிச.,31க்குள் விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தரனர்.
தொழிலாளர் நல நிதி சட்டத்தின் படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் நிறுவன பங்காக தொழிலாளிகளுக்கு ரூ. 60 என கணக்கிட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப செலுத்த வேண்டும். இந்தாண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2024 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும்.
இந்த நிதி தொழிலாளர்களின் கல்வி உதவித்தொகை, பாடநுால் வாங்க கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்க்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தொழிலாளர் நல வாரி அலுவலகத்தில் நேரில் அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் சென்னை- 6’ என்ற முகவரிக்கு டிச., 31க்குள் அனுப்ப வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.