உலக செஸ் தினத்தை முன்னிட்டு,கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு துறை சாா்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி கல்லூரி வளாகத்தில் ஜூலை 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இப்போட்டிகள் 9,11, 14, 17 வயதுகளுக்குள்பட்டோா் என 4 பிரிவுகளில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கு தனியாக 5 பிரிவுகளிலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் 20 பேருக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் குமரன், உடற்கல்வி இயக்குநா் குருசித்திரசண்முகபாரதி மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா். மாணவா்கள் தங்களது பெயா்களை செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள் நேரில் கல்லூரி வளாகத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண். 9443190781-ஐ தொடா்புகொள்ளலாம் என பள்ளி முதல்வா் குமரன் தெரிவித்துள்ளாா்.