கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான முன்பதிவு ஏப்.29-இல் தொடங்குகிறது.
இதுகுறித்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024–25 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு வரும் 29-இல் தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் செப்டம்பரில் தொடங்கி ஓராண்டுக்கு இரு பருவ முறைகளில் நடைபெறும்.
இந்தப் பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடைபெறும். இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பிளஸ் 2- வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தகுதியானோா் https://tncuicm.com/ என்ற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தேதி, பயிற்சிக் கட்டண விவரங்கள், நிபந்தனைகள் இணையத்தில் விரைவில் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரம், முன்பதிவிற்கு, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796, சேலம் பிரதான சாலை, முருகன் கோயில் அருகில், நாமக்கல்-637001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04286–290908, 90808-38008 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow