HomeBlogதமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பட்டய வகுப்பு
- Advertisment -

தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பட்டய வகுப்பு

Charter Class in Tamil Research Institute

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டய வகுப்பு

சென்னை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2022-2023ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி
தமிழக வரலாறு, மொழி,
பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து
அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய
வகுப்பு வார விடுமுறை
நாளான ஞாயிறுதோறும் நேரடியாக
ஓராண்டுக் காலம் நடைபெறும்.

ஒப்பட்டய
வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் www.ulakaththamizh.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி
பத்தாம் வகுப்புத் தேர்ச்சி.
வயதுவரம்பு கிடையாது. சேர்க்கைக் கட்டணம் ரூ.3000
ஆகும். சேர்க்கைக் கட்டணம் இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்எனும் பெயரில் வங்கி
வரைவோலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து
அனுப்பப்பட வேண்டும். நிறைவு
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021 டிசம்பர் 31ஆம் தேதி
மாலை 5க்குள் நிறுவன
முகவரிக்கு வந்து சேர
வேண்டும். வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற
விவரங்கள் நிறுவன
வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

Notification: Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -