ரெப்போ வட்டி
வீதங்களில் மாற்றம்? – ரிசர்வ்
வங்கி ஆளுநர் விளக்கம்
ரெப்போ
என்பது ரிசர்வ் வங்கி
மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனின் வட்டி வீதமாகும்.
இந்த ரெப்போ வீதம்
குறையும் போது வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனின் வட்டி வீதமும்
குறையும். வட்டி வீதங்களில் மாற்றம் செய்வது குறித்து
இரு மாதங்களுக்கு ஒருமுறை
நிதிக்கொள்கை கூட்டம்
நடைபெறும். அதன்படி நிதிக்கொள்கை குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று (07-04-2021) நடைபெற்றது.
இந்த
கூட்டத்தின் முடிவில் பேசிய
ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளதாவது:
ரெப்போ
வட்டி விகிதத்தில் 4 சதவீதமும்,
ரிவர்ஸ் ரெப்போ வட்டி
விகிதத்தில் 3.35 சதவீதமும் இருக்கும்.
இதனால் வங்கிகளின் வட்டி
விகிதத்தில் மாற்றம் ஏதும்
இருக்காது. இந்த வட்டி
விகிதத்தில் மாற்றங்கள் ஏதும்
இல்லாததால் 2021-2022 ஆம்
நிதியாண்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி 10.5 சதவீதம்
ஆக வைக்கப்படும்.
கடந்த
2020-2021ஆம் நிதியாண்டின் நான்காம்
காலாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாக
இருந்தது. அதே போல
2021-2022 ஆம் நிதியாண்டில் முதல்
அரையாண்டில் 5.2%, மூன்றாம் காலாண்டில் 4.4 % மற்றும் நான்காம்
காலாண்டில் 5.1 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வட்டி
விகிதத்தில் மாற்றங்கள் இருக்காது.