நிலவுக்கு அருகே 25 கி.மீ உயரத்துக்கு லேண்டர் வந்ததும் எதிர்விசையை பயன் படுத்தி அதன் வேகம் குறைக்கப்பட்டு இதன் மூலம் தரை பகுதிக்கும் லேண்டருக்குமான உயரம் படிப்படியாக குறைக்கப்படும்.
மேலும் தரையில் இருந்து 150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அதில் உள்ள sensor மூலம் தரையிறங்க சரியான இடத்தை தேர்வு செய்யப்படும்.
லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மெதுவாக லேண்டெர் தரையிறக்கப்படும்.லேண்டர் 5.45 மணிக்கு தொடங்கி 6.04 மணி வரை தரையிறங்கும் லேண்டர் தரையிறங்கிய 3 மணி நேரத்துக்கு பிறகு அதில் வைக்கப்பட்டுள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த நிகழ்வை காண்பதற்கு இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மாலை 5.20க்கு Live ஆரம்பம் ஆகும்
ISRO Official Website: https://www.isro.gov.in/LIVE_telecast_of_Soft_landing.html#