சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு – TNPSC
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வு
வாரியத்தின் மூலமாக பல்வேறு
போட்டித் தேர்வுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
இன்ஜினியரிங் சார்நிலை பணிகளுக்கான போட்டித்
தேர்வு 2021 செப்டம்பர் 18ல்
நடந்தது. இதற்கான மதிப்பெண்
விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீன்வளத்
துறை, இளநிலை பொறியாளர்
கைத்தறி மற்றும் ஜவுளித்
துறை, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே
9ம் தேதி இந்த
சான்றிதழ் சரிபார்ப்பு பணி
நடக்க உள்ளது.
நெடுஞ்சாலை துறையில் இளநிலை வரைவாளர்
பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் மே
12 மற்றும் 13 ஆம் தேதி
நடக்க உள்ளது. பொதுப்பணித் துறையில் இளநிலை ஆய்வாளர்
பணி தேர்வுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் மே 16 மற்றும் 18 நடக்க
உள்ளது. எனவே இது
தொடர்பான விவரங்களை டிஎன்பிஎஸ்சி, https://tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.