நீட்’, ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சிமத்திய அரசு இணையத்தில் மாணவர்கள் ஆர்வம்ராசிபுரம், நவ. 5-‘நீட்’, ஜே.இ.இ., கியூட் ஆகிய நுழைவுத்தேர்வுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமாக சேர்ந்து வருகின்றனர்.
மருத்துவ படிப்பிற்கு, ‘நீட்’, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., மத்திய பல்கலையில் பட்டப் படிப்புகளுக்கு, ‘கியூட்’ மற்றும் பேங்கிங், எஸ்.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த மத்திய அரசு இலவச பயிற்சிக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.என்.சி.இ.ஆர்.டி., என்றழைக்கப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்கென தனியாக https://sathee.prutor.ai/ எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியா முழுவதும், 5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த இணையதளத்தின் கீழ் பகுதியில் நுழைவு தேர்வுகளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்ற விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல் பள்ளி மேல்நிலை தேர்வுக்கான பயிற்சியும் உள்ளன. ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட நகர் பகுதிகளில் மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.