இன்று சிபிஎஸ்இ 10 ம் வகுப்ப மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது 2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்தப்பட்டன. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்தப்பட்டன. தேர்வு அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2-வது பருவ பொதுத்தேர்வுகள் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு 10-ம் வகுப்பு தேர்வு மே 24-ம் தேதி வரையும் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு 2022 ஜூன் 15-ம் தேதி வரையும் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியிட்டது.
https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவைக் காணலாம்.