சென்னை ஐஐடி ப்ரவர்தக் டெக்னாலஜி பவுண்டேஷன் ஸ்வயம் ப்ளஸ் உடன் இணைந்து பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பு வரும் அக்.,7ம் தேதி முதல் 18ம் தேதி வரை சென்னை ஐஐடி வளாகத்தில் நடக்கிறது. இதில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் https://iitmpravartak.org.in/advanced_electronic_mfg என்ற இணையதளம் வாயிலாக அக்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ.15,000 + ஜி.எஸ்.டி. பயிற்சி காலம் முடியும் வரை சென்னை ஐஐடி வளாகத்திலேயே தங்கிப் படிக்க மாணவர் ஒருவர்க்கு ஒரு நாளைக்கு ரூ.650 கட்டணம் செலுத்த வேண்டும்.
இது செமி-கண்டக்டர் குறித்த பயிற்சி என்பதால் எலக்ட்ரானிக்ஸ் பின்புலம் இருக்கும் பொறியியல், அறிவியல், டிப்ளமோ, பட்டதாரி மாணவர்கள் மட்டுமே இதில் பயிற்சி பெற தகுதி பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து திட்டத் தலைவர் சாரதி கூறுகையில், வரும் காலத்தில் செமி கண்டக்டர் துறை முக்கியத்துவம் பெற்று அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகும். எனவே அதில் மாணவர்கள் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் இப்பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.
மேலும் விவரங்களுக்கு: https://iitmpravartak.org.in/advanced_electronic_mfg