TAMIL MIXER EDUCATION.ன் TET செய்திகள்
ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் 27ம் தேதி வரை
திருத்தங்கள் மேற்கொள்ளலாம்
இடைநிலை
ஆசிரியர்களுக்கான தாள்
ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர்
தகுதித் தேர்வு ஆகஸ்ட்
மாதம் 25ம் தேதி
முதல் 31ம் தேதி
வரை முதற்கட்ட தேர்வுகள்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே
ஆசிரியர் தேர்வு வாரியம்
தெரிவித்தது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சமிபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர்
தகுதித் தேர்வு 2022-ம்
ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச்
மாதம் 14ம் தேதி
முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும்
விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம்
26ம் தேதி வரை
விண்ணப்பங்களை பதிவு
செய்ய கால அவகாசம்
வழங்கப்பட்டது. இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி
தேர்வுக்கான தேதி பின்னர்
அறிவிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி
தற்பொழுது ஆகஸ்ட் மாதம்
25ம் தேதி முதல்
3-ம் தேதி வரை
உள்ள தேதிகளில் இடைநிலை
ஆசிரியருக்கான தாள்
ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால
அட்டவணை மற்றும் அனுமதி
சீட்டு வழங்கும் விவரம்
ஆகஸ்ட் மாதம் இரண்டாம்
வாரத்தில் அறிவிக்கப்படும் என
கூறி இருந்தார்.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள்
விண்ணப்பங்களில் இன்று
முதல் வரும் 27ம்
தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
அதே
போல இனிவரும் காலத்தில்
திருத்தம் மேற்கொள்வதற்கான கால
அவகாசம் தரப்படாது. இம்முறை
தேர்வு எழுத 6,32,764 பேர்
விண்ணப்பித்துள்ளனர் என
தேர்வு வரியம் தெரிவித்துள்ளது.
Click here for Edit Option for TET Application
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here