TAMIL MIXER EDUCATION.ன்
TN TET செய்திகள்
கணினி வழித்
தேர்விற்கு தேர்வர்களுக்கு பயிற்சி – TN TET
ஆசிரியர்
காலிப்பணியிடங்களை நிரப்ப
விரைவில் டெட் தேர்வுகளை
நடத்த வேண்டும் என்று
கோரிக்கைகள் எழுந்தது. நடப்பு
ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகம்
இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த
நிலையில் கடந்த மார்ச்
மாதம் ஆசிரியர் தகுதி
தேர்வு குறித்த அறிவிப்பு
வெளியானது. அதனை தொடர்ந்து
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
இந்த
டெட் தேர்வில் இரண்டு
தாள்கள் உள்ளது. இதில்
முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும்
ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக
தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி
பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
இதற்கு 12 ஆம் வகுப்பில்
50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். இந்த
தேர்வானது அரசு மற்றும்
அரசு உதவி பெறும்
பள்ளிகளில் காலியாக உள்ள
இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களுக்கானது.
விண்ணப்பபதிவுகள் முடிவடைந்து ஓரிரு
மாதங்கள் ஆன நிலையில்
தேர்வு எப்போது என்று
விண்ணப்பதாரர்கள் கேள்வி
எழுப்பி வருகின்றனர்.
இந்த
நிலையில் தேர்வை கணினி
வழியில் நடத்த தேர்வு
வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த
கணினி வழித் தேர்விற்கு தேர்வர்களுக்கு பயிற்சி
அளிக்கவும் பயிற்சித் தேர்வு
நடத்தவும் ஆசிரியர் தேர்வு
வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த
வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வர்கள் கணினியில் வழியில் தேர்வை
எவ்வாறு எழுதலாம் என்று
பயிற்சி பெறலாம். இந்த
பயிற்சி குறித்த அறிவிப்புகள் மற்றும் தேர்வு அட்டவணை
மற்றும் அனுமதிச்சீட்டு ஆகிய
விவரங்கள் ஆகஸ்ட் இரண்டாம்
வாரத்தில் வெளியாகும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here