இந்திய ராணுவத்தில் பொதுப்பணி வீரர்களை தேர்வு
செய்ய நடத்தப்படும் தேர்வுகள்
ரத்து
இந்திய
ராணுவத்தில் பொதுப்பணி வீரர்களை
தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியானதால் போட்டித்தேர்வுகள் ரத்து
செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய
ராணுவத்தில் பொது பணிக்கான
வீரர்கள் போட்டித்தேர்வுகள் மூலமாக
நடத்தப்படுகின்றன. இந்த
தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் பல
ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். மேலும் இந்த
பதவிக்கு பொது போட்டி
தேர்வு நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டித்தேர்வுக்கான நுழைவு
தேர்வு வினாத்தாள் வெளியானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேவை
சேர்ந்த ஒரு போலீசாரும் ராணுவத்தை சேர்ந்த சிலரும்
சேர்ந்து கேள்வித்தாளை கசிய
விட்டது கண்டறியப்பட்டது. இது
குறித்து புனே பகுதியை
சேர்ந்த 3 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
எனவே
இதன் காரணமாக ராணுவ
பணிக்காக நடத்தப்பட இருந்த
போட்டித்தேர்வுகள் ரத்து
செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
விவரம்
குறித்து அதிகாரிகள் கூறுகையில்:
போட்டித்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வெளியானது
குறித்து விசாரணை நடைபெற்று
வருகிறது. போட்டித் தேர்வுகளில் உள்ள வெளிப்படை
தன்மை காரணமாக இந்த
தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.