வேலைவாய்ப்பு முகாம்கள் ரத்து – தேர்தல் எதிரொலி
தமிழகத்தில் வரும் May மாதத்தோடு சட்டமன்றத்திற்கான ஆயுட்காலம் முடிவு பெறவுள்ளது. அதனால் வரும் April 6-ஆம் தேதி தமிழகத்தில் அதற்கான தேர்தல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் பலவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இம்மாதம் தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதம் வரை பல்வேறு மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு முடிவு செய்தது. அதனை அரசின் தனியார் நிறுவன பணிகளுக்கான இணையதளத்தில் பதிவிட்டு இருந்தது. ஆனால் தற்போது அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து வேலைவாய்ப்பு முகாம்களும் இரத்து செய்யப்படுகின்றன என அரசின் தனியார் நிறுவன பணிகளுக்கான இணையதளத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட இம்முகாம்கள் தேர்தலுக்கு பிறகு மீண்டும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.