TAMIL MIXER EDUCATION.ன்
கூட்டுறவு பணியாளர் தேர்வு பற்றிய செய்திகள்
கூட்டுறவு பணியாளர்
தேர்வு ரத்து
இது குறித்து, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அறிக்கை:
கடந்த
2020, ஜன., 7ம் தேதி,
திருப்பூர் மாவட்ட ஆள்
சேர்ப்பு நிலையம் மூலம்
கூட்டுறவு துறையில் உள்ள
காலி பணியிடங்களுக்கு ஆள்
சேர்ப்பு நிலையம் வாயிலாக
விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மாவட்டத்தில் காலியாக இருந்த 27 அலுவலக
உதவியாளர்கள் மற்றும்
4 விற்பனை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டது.
இதற்கான
நேர்முக தேர்வு 2020, நவ.,
16 முதல் 21 ம் தேதி
வரை நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல்
காரணமாக இத்தேர்வு நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டு, இது
நாள் வரை நிலுவையில் இருந்து வருகிறது.
எனவே
இந்த அறிவிப்புகள் அனைத்தும்
நிர்வாக காரணங்களுக்காக ரத்து
செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here