பிறந்த தேதி
சான்று இல்லாமல் PAN Number பெற
முடியுமா?
இந்தியாவில் தான் வருமானவரி அதிகம்
விதிக்கப்படுகிறது என்கிறார்களே? அதனால் தான் இங்கு
வரி ஏய்ப்பும் அதிகமாக
நடைபெறுகிறதோ? வைகை
வளவன், மதுரை.வரி
ஏய்ப்பை பற்றி நீங்களோ,
நானோ கவலைப்பட வேண்டியதில்லை. அதை கண்டு பிடிப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும் தனித் துறையே
இயங்கிக் கொண்டு இருக்கிறது.வரி செலுத்தும் அளவுக்கு
வருமானம் வருகிறதே என்று
மகிழ்ச்சியோடு வரி
செலுத்துவதே, நம்மைப் போன்ற
சாதாரணர்களின் கடமை.
உலகிலேயே மிக அதிகமாக,
கிட்டத்தட்ட 57 சதவீதம் வருமான
வரி வசூல் செய்யும்
வட ஐரோப்பிய நாடு,
பின்லாந்து. அதுதான் உலகிலேயே
மகிழ்ச்சியான நாடு.
கல்வி,
சுகாதாரம் போன்ற சேவைகள்
அங்கே இலவசம். வரி
செலுத்துவோர் கேட்க
வேண்டியது கூடுதல் தரத்தையும் வசதிகளையும் தானே அன்றி,
வரி கட்டாதவர்களைப் பற்றி
அல்ல.கடந்த ஆண்டு
நான் பி.பி.எப்.,
கணக்கு துவங்கினேன். 7.1 சதவீத
வட்டி கிடைக்கிறது. வங்கியின்
வட்டிவிகிதங்கள் உயரும்
என்று சொல்லப்படுகிறதே, பி.பி.எப்.,
வட்டியும் உயருமா?
அப்படி
உயர்ந்தால், எனக்கும் அந்தப்
பலன் கிடைக்குமா?என்.
விக்னேஷ், மின்னஞ்சல்.பி.பி.எப்.,
வட்டி ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஏப்ரல்
2020 முதல் 7.1 சதவீத வட்டி
வழங்கப்பட்டு வருகிறது.
குறைக்கப்படவில்லை.
10 ஆண்டு
அரசு கடன் பத்திர
முதலீட்டு வருவாயை ஒட்டியே,
பி.பி.எப்.,
வட்டி விகிதம் நிர்ணயம்
செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக சரிந்து வந்த வட்டி
விகிதம், தற்போது உயர்ந்துள்ளது. அதனால், பி.பி.எப்.,
வட்டி விகிதத்தை அதிகமாக்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பிரிட்டனும், அமெரிக்காவும் உயர்ந்துள்ள பணவீக்கம் பற்றி
கவலைப்பட ஆரம்பித்து உள்ளதால்,
அவர்கள் நாட்டில் வட்டி
விகிதங்களை உயர்த்த முடிவெடுத்துள்ளனர்.
நாம்
பணவீக்கத்தை பற்றி என்ன
கருதுகிறோம் என்பதை, புதிய
தலைமைப் பொருளாதார ஆலோசகர்
அனந்த நாகேஸ்வரன் வெளியிடும் பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிய வரும். வட்டி
உயருமானால், அந்தப் பலன்
உங்களுக்கும் கிடைக்கும். கிட்டத்தட்ட 92 வயதானவருக்கு, ‘பான்‘
எண் பெற, பிறந்த
தேதி சான்று எதுவும்
இல்லை. ஆதாரில் உள்ள
பிறந்த தேதியை ஏற்றுக்கொள்வதில்லை.
PAN NUMBER பெற வேறு
வழி இருக்கிறதா? மேலும்
வங்கி வைப்புத் தொகை
வட்டி, ஆண்டுக்கு 5 ஆயிரத்துக்கும் குறைவாக வந்தாலும், 15ஜி
படிவம் கொடுக்காத நிலையில்
வரி பிடித்தம் செய்யப்படுமா?ஸ்ரீனிவாசன், மதுரை.’இ–பான்‘
வாங்கிக் கொள்ளுங்கள். அதுதான்
சுலபமான வழி. இதற்கு
ஆதார் எண்ணும், அதனோடு
இணைக்கப்பட்ட மொபைல்
எண்ணும் இருந்தால் போதும்.
15ஜி
என்பது என்ன என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய
மொத்த வட்டி வருவாய்,
50 ஆயிரம் ரூபாய்க்குள் தான்
இருக்கிறது. அதனால், டி.டி.எஸ்.,
பிடித்தம் செய்யவேண்டாம் என்று
வங்கிக்குச் சொல்வதற்குத் தான்
15ஜி பயன்படுகிறது. நீங்கள்
பல்வேறு வங்கிகளில் முதலீடு
செய்திருக்கலாம் அல்லவா?
உங்களுக்குத் தான் மொத்த வட்டி
வருவாய் எவ்வளவு வருகிறது
என்பது தெரியும், வங்கிக்குத் தெரியாதே. அதனால், வைப்பு
நிதி வைத்துள்ள ஒவ்வொரு
வங்கிக்கும், 15ஜி படிவம்
கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் டி.டி.எஸ்.,
பிடித்தம் செய்வார்கள். எனது
மகன், அமெரிக்காவில் ‘கிரீன்
கார்டு‘ பெற்று வசித்து
வருகிறார்.
தற்போது,
எனது பூர்வீக இடத்தை
விற்று வரும் பணத்தில்
ஒரு பகுதியை, அவருக்கு
அனுப்ப விரும்புகிறேன். எப்படி
அனுப்புவது? வரி உண்டா?இராமசாமி,
மதுரை.உங்கள் மகனுக்கு
நீங்கள் கொடுப்பது ‘பரிசாக‘
கருதப்படும். ஆனால், அதற்கு
முன்னர், பூர்வீக இடத்தை
விற்று வரும் பணத்துக்கு, ஒருவேளை நீண்டகால ஆதாய
வரி செலுத்த வேண்டுமா
என்பதை நல்ல ஆடிட்டரைக் கலந்தாலோசித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நேரடியாக,
வங்கி வாயிலாகவே உங்கள்
மகனுக்குப் பணத்தை அனுப்பிவைக்கலாம். அவர், அங்கே
உள்ள வரி விதிகளின்
படி, தமக்கு வந்த
பூர்வீக சொத்து வருவாய்
பற்றி உங்கள் மகன்
‘டிக்ளேர்‘ செய்ய வேண்டியிருக்கலாம்.கடந்த 2008ல்
ஓய்வுபெற்றேன். 2017 கடைசியில்,
யு.ஏ.என்.,
மற்றும் இ.பி.எஸ்.,
எண்ணுக்கு பி.எப்.,
அலுவலகத்தில் மனு
செய்தேன். பல்வேறு காரணங்களால், அவை இன்னும் கிடைக்கவில்லை.
யு.ஏ.என்.,
எண்ணை என்னால் உருவாக்க
முடியவில்லை. இ.பி.எஸ்.,
இன்னும் செட்டிலாகவில்லை. என்ன
செய்வது?டி. ராஜாமணி,
மின்னஞ்சல்.வருங்கால வைப்பு
நிதி மண்டல அலுவலகங்கள் தொடர்ச்சியாக குறைதீர்
முகாம்களை நடத்தி வருகின்றன.
நமது
நாளிதழைப் பார்த்து வாருங்கள்.
உங்கள் பகுதியில் எப்போது
முகாம் நடக்கிறது என்பதைத்
தெரிந்துகொண்டு, நேரே
போய் உங்கள் குறையைத்
தெரிவித்து, தீர்வு என்ன
என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.நான்
ஒரு என்.ஆர்.ஐ.,
அமெரிக்க குடிமகன். எனக்கு
PAN NUMBER இருக்கிறது. ஆனால், ஆதார் இல்லை.
ஆதார்
என்பது இந்திய குடிமகன்களுக்கு மட்டுமே. அப்படியானால், நான்
எனது PAN
–
எண்ணை எப்படி ஆதாரோடு
இணைக்க முடியும்? அருண்,
மின்னஞ்சல்.நீங்களே குறிப்பிட்டது போன்று, உங்களால் ஆதார்
பெற முடியாது. மொபைல்
நிறுவனங்கள் என்.ஆர்.ஐ.,களுக்கான
மொபைல் இணைப்பு வழங்கும்போது, என்ன வழிமுறையைப் பின்பற்ற
வேண்டும் என்று, திருத்தப்பட்ட நெறிமுறைகளை, இந்திய தொலைதொடர்பு துறை வெளியிட்டுள்ளது.
இணையத்தில் அந்தப் பிரதி கிடைக்கிறது, படித்துக்கொள்ளுங்கள். இந்திய
வங்கிகளோ, இதர சேவையாளர்களோ, ஆதார் கேட்டால், நீங்கள்
அதனைப் பெற முடியாது
என்பதைத் தெளிவுபடுத்துங்கள். உங்களால்
ஆதார் பெற முடியாது
என்பதால், அதனை பான்
எண்ணோடு இணைக்க வேண்டாம்.வாசகர்களே,
நிதி சம்பந்தப்பட்ட உங்கள்
கேள்விகளை, ‘இ—மெயில்‘
மற்றும் ‘வாட்ஸ் ஆப்‘
வாயிலாக அனுப்பலாம். ஆயிரம்
சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ்
சாலை, சென்னை – 600 014என்ற
நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில்
கேட்கவும். ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com
ph: 98410 53881