தையல், எம்ப்ராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம்,
சிட்ரா விசைத்தறி பணி
நிலைய பொறுப்பு அதிகாரி
விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய
ஜவுளி அமைச்சகம் சார்பில்,
பெண்களுக்கான இலவச
தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி பயிற்சி, அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி
காலம், 2 மாதம். வயது,
40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி, 6ம்
வகுப்பு முதல்.பவர்
தையல் மெஷின் இயக்குதல்,
துணி அளவெடுத்தல், சுடிதார்,
ஜாக்கெட், சட்டை, முககவசம்
போன்ற ஆடைகள் தைக்கவும்,
எம்ப்ராய்டரி பயிற்சி
மூலம், துணியில் பூ
வேலைப்பாடுகள் செய்ய
பயிற்சி அளிக்கப்படும். காலை,
9.30 மணி முதல், மாலை,
4.30 மணி வரை பயிற்சி
வகுப்பு நடக்கும்.
ஆதார்,
ஜாதிச்சான்று நகல்,
தலா, 2 மார்பளவு புகைப்படம், கல்வி மாற்றுச்சான்று, மதிப்பெண்
சான்று நகல் ஆகியன
விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டும்.
எஸ்.சி.,-எஸ்.டி.,
சமூகத்தினருக்கு முன்னுரிமை. குறிப்பாக, முதலில் வருவோருக்கு முன்னுரிமை உண்டு. படித்த,
வேலைத்தேடும் பெண்கள்,
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
விண்ணப்பத்தை, வரும், 23க்குள், சிட்ரா
விசைத்தறி பணி நிலையம்,
477/ 158, திருச்சி பிரதான சாலை,
குகை, சேலம் -6 என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், தகவல் பெற,
0427 2219486,
9445689787, 9715487868 எண்களை தொடர்பு
கொள்ளலாம்.