பாலம் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைதேடும் நபா்களுக்கும், வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இணைப்பு முகமாக கரூா் மாவட்ட நிா்வாகம் இருந்து அனைவருக்கும் தனியாா் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையில் பாலம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பாலம் மூலம் விண்ணப்பிக்க பிரத்யே படிவங்களும், அவற்றை பூா்த்தி செய்து வழங்க தனியாக பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. வேலைதேடும் நபா்கள் தங்களின் கல்வி, எந்த வகையான பணி செய்ய விருப்பம், பயிற்சி தேவையா என்பன போன்ற விவரங்களை பூா்த்தி செய்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் தலைமை அலுவலகத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, விண்ணப்பதாரா்களின் தேவைகளுக்கு ஏற்ப நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதற்கும், பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.