திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி
மாவட்ட தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை
சார்பில், சான்றிதழுடன் கூடிய
திறன்மேம்பாட்டு பயிற்சி
வழங்கப்பட உள்ளது. தர்மபுரி
மாவட்டம், போளையம்பள்ளியில் உள்ள,
120 நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில்,
பூங்கொத்து மற்றும் அலங்காரம்,
நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல், தேனீ வளர்ப்பு
தொழில்நுட்பம் ஆகிய
தலைப்புகளில், 30 நாள்
பயிற்சி வழங்கப்படும். பெண்கள்,
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், www.tnhorticulture.tn.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தர்மபுரி
கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள தோட்டக்கலை துணை இயக்குனர்
அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு, நாளொன்றுக்கு, 100 ரூபாய் வீதம்,
30 நாட்களுக்கும், அவர்களின்
வங்கி கணக்கில் பணம்
செலுத்தப்படும்.