TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தொழிற்பயிற்சி
பெற
பெண்களுக்கு
அழைப்பு – காரைக்கால்
தொழிலாளா் குடும்ப பெண்களுக்கு தொழிற்பயிற்சியும்,
பயிற்சி
மையத்தில்
முன்
மழலையா்
வகுப்புக்கு
சேர்க்கையும்
நடைபெறுவதை
பயன்படுத்திக்கொள்ள
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் தொழிலாளா் துறை அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில்,
எண்.
97 கிழக்குத்
தெரு,
கோட்டுச்சேரி
மற்றும்
எண்.
44, முதல்
குறுக்குத்
தெரு,
பாரதி
நகா்
காரைக்கால்
என
2 பகுதிகளில்
மகளிர்
தொழிலாளா்
நல
மையங்கள்
செயல்பட்டுவருகின்றன.
தொழிலாளா் குடும்ப பெண்களுக்கு தையல், எம்பிராய்டரி,
கைவினைத்
தொழில்,
பின்னல்
பைகள்,
குவளைகள்,
ஸ்டாண்டுகள்,
கம்பளி
வேலைகள்
உள்ளிட்ட
கைவினைப்
பொருள்
தயாரிப்புப்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மேலும் பொம்மை தயாரித்தல், நகை தயாரித்தல், மெழுகுவா்த்தி
தயாரிப்பு,
உணவு
பதப்படுத்துதல்
போன்ற
பல்வேறு
குறுகிய
கால
திறன்
மேம்பாட்டு
பயிற்சியும்
இலவசமாக
அளிக்கப்படுகிறது.
இந்த மையங்களில் இரண்டரை வயதுக்கு மேல் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டு,
முன்
மழலையா்
கல்வி
போதிப்புடன்,
ஊட்டச்
சத்து
உணவு
வழங்கப்படுகிறது.
டிச. 1 முதல் இதற்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பயிற்சி
மற்றும்
முன்
மழலையா்
வகுப்பு
சேர்க்கைக்கு
மையத்தை
தொடா்பு
கொள்ளலாம்.