HomeBlogவேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு - தர்மபுரி
- Advertisment -

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு – தர்மபுரி

Call for unemployment benefits - Dharmapuri

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை செய்திகள்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்புதர்மபுரி

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழக
அரசின் சார்பில் படித்த
வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை
வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி
மாதம் ஒன்றுக்கு SSLC தேர்ச்சி
பெறாதவர்களுக்கு ரூ.200/-ம்,
SSLC
தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம்,
மேல்நிலைக்கல்வி (12ம்
வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம்,
பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம்
வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு
கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-ம்,
மேல்நிலைக்கல்வி தேர்ச்சி
பெற்றவர்களுக்கு ரூ.750/-ம்
பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம்
வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 30.09.2022 உடன்
முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட
தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட
கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து
5
ஆண்டுகளுக்கு மேல்
பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூர்த்தி
செய்திருத்தல் வேண்டும்.
SC/ST
பிரிவினருக்கு 31.08.2022 அன்று
45
வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும்
கடந்திருக்கக் கூடாது,
விண்ணப்பதாரரின் குடும்ப
வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000/க்கு
மிகையாமல் இருக்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி
கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்க கூடாது. (அஞ்சல்
வழியில் படிக்கலாம்), பொறியியல்,
மருத்துவம், விவசாயம் கால்நடை
அறிவியல் மற்றும் இது
போன்ற தொழில்நுட்பப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்.

இவ்வுதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப
படிவங்களை தருமபுரி மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி
செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும்
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 31.08.2022 வரை
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில்
அளிக்க வேண்டும்.

மேலும்,
ஏற்கனவே உதவித்தொகை பெற்று
மூன்றாண்டு காலம் நிறைவுபெறாமல் 2022-2023ம் நிதியாண்டிற்கு சுயஉறுதி ஆவணம் அளிக்காதவர்கள், 31.08.2022-க்குள் சுய
உறுதிமொழி ஆவணம் அளித்து
தொடர்ந்து உதவித்தொகை பெற்று
பயன்பெறுமாறு ஆட்சியர்
கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -