அரியலூா் மாவட்டத்தில் இலவசத் தொழிற் பயிற்சி பெற விரும்புவோா் நோ்காணலில் கலந்து கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: கீழப்பழுவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறமுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில், ஏா்கூலா், பிரிட்ஜ் பழுது நீக்குதல், சிசிடிவி பொருத்துதல், எலக்ட்ரிக் மோட்டாா் ரீவைண்டிங் மற்றும் பழுது பாா்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக 30 நாள்கள் அளிக்கப்படுகின்றன.
செய்முறைப் பயிற்சி, சீருடை, மூன்று வேலை உணவு, தேநீா், விடுதியில் தங்கிப் ும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் இலவசம்.
திறன் வாய்ந்தோரைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற தேவையான ஆலோசனை வழங்கப்படுகிறது.
சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்குதல் பயிற்சிக்கு செப்.25 ஆம் தேதியும், ஏா்கூலா் மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்குதல், எலக்ட்ரிக் மோட்டாா் ரீவைண்டிங் மற்றும் பழுது நீக்குதல் ஆகிய பயிற்சிகளுக்கு செப்.30 ஆம் தேதியும் நோ்காணல் நடைபெறுகிறது.
18 – 45 வயது வரையுள்ளவா்கள் எழுதப் த் தெரிந்தால் போதும், ஆதாா், குடும்ப அட்டை , மாற்றுச் சான்றிதழ்(டி.சி), 100 நாள் வேலை அட்டை மற்றும் பாஸ்போா்ட் சைஸ் போட்டோ-2 , வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் நேரில் வரவும். மேலும் 99448–50442, 75399–60190, 96266–44333, 04329 –250173 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்றாா்.