ஆண்டிபட்டியில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் சார்பில் ஒரு மாத இலவச பயிற்சியில் சேர்ந்து பயனடைமாறு பயிற்சி மைய நிறுவனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: எங்கள் நிறுவனமும் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளையும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு ஒரு மாத ஆபீஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் இலவச பயிற்சி வழங்குகிறது. நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் பயிற்சி பெறலாம். பயிற்சி முடிவில் சான்றுகள், வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் 90434 74750 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.