HomeBlogமானியத்தில் மின் மோட்டார் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
- Advertisment -

மானியத்தில் மின் மோட்டார் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Call for farmers to get electric motor in subsidy

மானியத்தில் மின்
மோட்டார் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த
விவசாயிகளுக்கு மானிய
விலையில் மின் மோட்டார்
வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியான
சிறு, குறு விவசாயிகள் மின் மோட்டார் பெற
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக
மின் மோட்டார்கள் நிறுவ
விரும்பும் சிறு, குறு
விவசாயிகளுக்கு மானியமாக
ரூபாய் பத்தாயிரம் வீதம்
31
பேருக்கு ரூபாய் 3.10 லட்சம்
நிதி வழங்கப்பட உள்ளது.

இதற்கு
விண்ணப்பிக்க விருதுநகர் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார
விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் உள்ள
உதவி செயற்பொறியாளர் வேளாண்மை
பொறியியல் துறையை அணுகலாம்.

அதேபோல்,
ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி,
வெம்பக்கோட்டை, சாத்தூர்
வட்டார விவசாயிகள் உதவி
செயற்பொறியாளரை அணுகலாம்
அல்லது https://mis.aed.tn.gov.in/login என்ற
இணையதளத்தில் பதிவு
செய்து முன்னுரிமை படி
மானியம் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -