சான்றிதழுடன் கூடிய
திறன் மேம்பாட்டு பயிற்சி
பெற அழைப்பு
தமிழக
அரசின் தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை
சார்பில், பவானிசாகர் யூனியன்
பகுத்தம்பாளையத்தில் உள்ள
அரசு தோட்டக்கலை பண்ணையில்
சான்றிதழுடன் கூடிய
தோட்டக்கலை திறன் மேம்பாட்டு பயிற்சி, 80 பேருக்கு வழங்கப்பட
உள்ளது.
இதுபற்றி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ப.தமிழ்செல்வி வெளியிட்ட அறிக்கை:
பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம்
செய்தல், நுண்ணீர் பாசன
அமைப்பு நிறுவுதல் மற்றும்
பராமரித்தல், தேனீ வளர்ப்பு
தொழில் நுட்பம் என்ற
தலைப்புகளில், 30 நாட்கள்
பயிற்சி அளிக்கப்படும். பெண்கள்,
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஏற்கனவே
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தேசிய திறன்
மேம்பாட்டு கழகத்தில் ஏதேனும்
ஒரு பயிற்சி பெற்றவர்,
இப்பயிற்சியில் சேர
இயலாது.
விருப்பம்
உள்ளோர், https://tnhorticulture.tn.gov.in/ என்ற
இணைய தளத்தில் விண்ணப்ப
படிவத்தை பதிவிறக்கம் செய்து,
வங்கி கணக்கு புத்தக
நகல், கல்வி தகுதி
சான்று நகல், ஆதார்
அட்டை, ரேஷன் கார்டு
நகல், பாஸ்போர்ட் அளவு
புகைப்படம் இணைத்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இப்பயிற்சி திங்கள் முதல் வெள்ளி
வரை அனைத்து அலுவலக
நாளிலும், மொத்தம், 30 நாள்
மட்டும் பயிற்சி தரப்படும்.
பயிற்சியில் பங்கேற்போருக்கு, 30 நாட்களுக்கு போக்குவரத்து செலவாக,
நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய்
அவரது வங்கி கணக்கில்
செலுத்தப்படும்.