தமிழகத்தில் பிப்.,
25 முதல் பேருந்துகள் ஓடாது
தமிழக
அரசின் கீழ் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழகத்தின்
ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம்
தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக
போக்குவரத்து கழக
ஊழியர்கள் ஊதிய உயர்வு,
தற்காலிக பணியாளர்களுக்கான நிரந்தர
பணி நியமனம் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசிடம் பலமுறை
கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு
செவி சாய்க்காமல் அரசு
காலம் தாழ்த்தி வந்த
காரணத்தால் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த
கோரிக்கைகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் பலமுறை
முறையிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத காரணத்தால் தற்போது இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி
25 ஆம் தேதி முதல்
தொடங்கப்படும் இந்த
வேலைநிறுத்த போராட்டம் காலவரையற்று நடத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
பேருந்துகள் இயங்காது என்பதால்
பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே அரசு
விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி
சுமூக முடிவை எடுக்க
வேண்டும் என கோரிக்கை
வைத்துள்ளனர்.