Budget 2024 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றம் இல்லை.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.
80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவு பொருட்கள் சென்றடைந்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மேல் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளன. 10 ஆண்டுகளில் 7 ஐஐடிக்கள், 3,000 புதிய ஐடிஐ, 319 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 19 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர். பிரதான் மந்திரி வீடு காட்டும் திட்டம் மூலம் 70% பெண்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார். முக்கிய அம்சங்கள்:
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.
கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும்.
3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும்.
லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
2023-24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடி. திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை – 5.8%.
2024-25 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 5.1% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்குள் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.5% ஆகக் குறைக்க
நேரடி மற்றும் மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை.
வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்
கூடுதலாக செலுத்திய வருமான வரி 10 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்.
ரூ.25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும். # வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.
மாதாந்திர ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ 1.66 லட்சம் கோடியாக உள்ளது.
ரூ11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம்.
கார்ப்பரேட் வரி 22% ஆக குறைப்பு.
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் நேரடி வரி வருவாய் என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரிப்பு.
10 வருடங்களில் 500 பில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது. # உள்கட்டமைப்புக்கான செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க திட்டம்.
பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை.
3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.
விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
கடல் உணவுகளின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. 5 மீன்வள பூங்காக்கள் அமைக்கப்படும்.
விவசாய துறையில் கூடுதல் முதலீடு செய்ய அரசு தயார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow