பிடெக் மாணவர்கள்
ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்க அனுமதி
பிடெக்
மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரேநேரத்தில் பொறியியல்
படிப்பையும் படிக்க அனுமதி
வழங்கலாம் என்று ஏஐசிடிஇ,
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து
கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ அனுப்பிய சுற்றறிக்கை:
ஏஐசிடிஇ–யின்
நிர்வாகக் குழுவின் 144-வது
ஆலோசனைக் குழு ஜூலை
13-ம் தேதி நடைபெற்றது. அதில், பிடெக் மாணவர்கள்,
தாங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரேநேரத்தில் பொறியியலும் படிக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
அதன்படி,
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் பிடெக் படிப்பை
எடுத்துப் படிக்கும் மாணவர்களை,
லேட்டரல் என்ட்ரிஅடிப்படையில் தகுதியான
பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான
செய்முறையையும் படிக்க
உரிய அனுமதி வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள்மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.