பிப்.25-ல்
BSNL தொலைபேசி மூலம்
குறைதீா் கூட்டம்
BSNL
சென்னை தொலைபேசி நிறுவனம்
சார்பில், குறைதீா் கூட்டம்
பிப்ரவரி 25-ஆம் தேதி
நடைபெறுகிறது.
அன்று
பிற்பகல் 2.30 மணி முதல்
மாலை 6 மணி வரை
நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வாடிக்கையாளா்களுக்கு தரைவழி
தொலைபேசி, பிராட்பேண்ட், மொபைல்,
லீஸ் லைன் உள்ளிட்ட
சேவைகள் தொடா்பாகவும், நீண்ட
நாள்கள் தீா்க்கப்படாமல் உள்ள
பிரச்னைகளுக்கும் இந்தக்கூட்டத்தில் தீா்வு காணப்படும். உடனடியாக தீா்க்கப்படாத குறைகளுக்கு 10 நாள்களுக்குள் தீா்வு
காணப்படும்.
கரோனா
நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளா்கள் இந்தக்கூட்டத்தில் நேரடியாக
பங்கேற்பதைத் தவிர்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம்
இக்கூட்டம் நடத்தப்படும்.
எனவே,
வாடிக்கையாளா்கள் 044-2643
3500 என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம். மேலும்,
94450 18440 என்ற மொபைல் எண்
மூலம், குறுஞ்செய்தியாகவும், கட்செவி
(வாட்ஸ்–அப்) மூலமாகவும், இ–மெயில்
மூலமாகவும் தங்கள் குறைகளைத்
தெரிவிக்கலாம். எனவே,
வாடிக்கையாளா்கள் இந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.