TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை
செய்திகள்
சென்னை ஐஐடி.யில் இணையவழியில் பி.எஸ். எலக்ட்ரானிக்
சிஸ்டம்ஸ்
படிப்பு
சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள
இணைய
வழியிலான
பி.எஸ். எலக்ட்ரானிக்
சிஸ்டம்ஸ்
என்ற
நான்காண்டு
பட்டப்
படிப்புக்கு
ஜுன்
25ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ்
துறை
வேலைவாய்ப்புக்கு
உதவும்
வகையில்
பி.எஸ். எலக்ட்ரானிக்
சிஸ்டம்ஸ்
என்ற
புதிய
4 ஆண்டுகால
இணையவழி
பட்டப்
படிப்பை
சென்னை
ஐஐடி
அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில்
சேர
ஜேஇஇ
நுழைவுத்தேர்வு
தேவையில்லை.
மேலும்,
வயது
வரம்பும்
கிடையாது.
இது தொடா்பாக சென்னை ஐஐடி பேராசிரியா் ஆண்ட்ரு தங்கராஜ் செய்தியாளா்களிடம்
புதன்கிழமை
கூறியதாவது:
எலக்ட்ரானிக்ஸ்
துறையில்
மிகப்பெரிய
அளவில்
வேலைவாய்ப்புகள்
உருவாகி
வருகின்றன.
இவற்றையெல்லாம்
கருத்தில்கொண்டு
சென்னை
ஐஐடி–யில் பிஎஸ் எலக்ட்ரானிக்
சிஸ்டம்ஸ்
என்ற
4 ஆண்டுகால
இணையவழி
பட்டப்
படிப்பு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகுதி –
பணி
வாய்ப்புகள்:
பிளஸ்
2 வகுப்பில்
கணிதம்,
இயற்பியல்
பாடங்கள்
படித்த
எவா்
வேண்டுமானாலும்
இந்த
படிப்பில்
சேரலாம்.
வயது
வரம்பு
கட்டுப்பாடு
ஏதும்
கிடையாது.
படிப்பு காலத்துக்கு ஏற்ப அடிப்படைச்சான்றிதழ்
பட்டம்,
டிப்ளமா,
பிஎஸ்
பட்டம்
என
வெவ்வேறு
நிலைகளில்
பட்டம்
பெறலாம்.
இந்தப்
படிப்பை
முடிப்பவா்கள்
ஆட்டோமோட்டிவ்,
நுகா்வோர்
மின்னணு
பொருள்கள்,
மருத்துவ
மின்னணு
சாதனங்கள்,
பாதுகாப்பு
தொழில்
என
பல்வேறு
துறைகளில்
எலக்ட்ரானிக்ஸ்
பொறியாளராகவோ,
வடிவமைப்பு
மற்றும்
மேம்பாட்டு
பொறியாளராகவோ
பணியை
தொடங்கலாம்.
பாடம்
நடத்துவது,
அசைன்மென்ட்,
சந்தேகங்களுக்கு
விளக்கம்
பெறுவது
என
அனைத்தும்
இணையவழியில்
நடைபெறும்.
நேரடி
பயிற்சிக்கு
மட்டும்
ஐஐடி
ஆய்வகத்துக்கு
நேரில்
வரவேண்டும்.
படிப்புக்காலத்தில்
முன்னணி
நிறுவனங்களில்
இன்டா்ன்ஷிப்
பயிற்சியும்
பெற
வேண்டும்.
இன்டா்ன்ஷிப்
மேற்கொள்ளும்
நிறுவனங்களிலேயே
பணிவாய்ப்பு
கிடைக்கவும்
வாய்ப்பு
உண்டு.
‘இந்தியா
செமிகண்டக்டா்‘
இயக்கத்தின்கீழ்
இந்தியாவை
எலக்ட்ரானிக்ஸ்
உற்பத்தி
மற்றும்
வடிவமைப்பு
துறையில்
உலக
அளவில்
முன்னணி
கேந்திரமாக
உருவாக்க
மத்திய
அரசு
திட்டமிட்டுள்ளது.
வருங்காலத்தில்
செமிகண்டக்டா்
தொழில்
உலக
அளவில்
மிகப்பெரிய
அளவிலான
தொழில்துறையாக
உருவெடுக்கும்
என்றும்
உலக
பொருளாதாரத்தில்
செமிகண்டக்டா்
தொழில்
மிக
முக்கிய
பங்கு
வகிக்கும்.
இத்துறையில் லட்சக்கணக்கான
வேலைவாய்ப்புகள்
உருவாகும்.
எனவே,
இந்த
இணையவழி
பட்டப்
படிப்பை
முடிப்போருக்கு
பிரகாசமாக
வேலைவாய்ப்புகள்
காத்திருக்கின்றன
என்றார்
அவா்.
ஐஐடி
எலெக்ட்ரிக்கல்
பொறியியல்
துறை
பேராசிரியரும்
இந்த
புதிய
இணையவழி
படிப்பின்
ஒருங்கிணைப்பாளருமான
பேபி
ஜார்ஜ்
கூறும்போது,
‘இந்த
படிப்பில்
சேர
ஜேஇஇ
நுழைவுத் தேர்வு அவசியமில்லை.
தகுதித்தேர்வில்
தேர்ச்சி
பெற்றால்
போதும்.
இதில்
சேர
விரும்புவோர்
ஜுன்
மாதம்
25-ஆம்
தேதிக்குள்
https://study.iitm.ac.in/es என்ற இணையவழி முகவரியில் விண்ணப்பிக்க
வேண்டும்
என்றார்.
சென்னை
ஐஐடி
ஏற்கெனவே
‘பிஎஸ்
டேட்டா
சயின்ஸ்
அண்ட்
புரோகிராமிங்‘
என்ற
இணையவழி
பட்டப்படிப்பையும்
வழங்கி
வருகிறது.