குத்துச்சண்டை பயிற்சி முகாம்
மதுரை மாவட்ட குத்துச் சண்டைக் கழகத்தின் சாா்பில் மே மாதம் 15-ஆம் தேதி குத்துச்சண்டை பயிற்சி முகாம் தொடங்குகிறது.
இதுகுறித்து அந்தக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலா் ப.ச.செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
குத்துச்சண்டைக் கழகத்தின் சாா்பில் 15-ஆம் ஆண்டு கோடைக்கால, இலவச குத்துச்சண்டை பயிற்சி முகாம் வருகிற 5.5.24-ஆம் தேதி முதல் 30.5.24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
குதிரை பந்தய சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் பயிற்சி முகாமில் 10 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி பெற விரும்புவோா் 90255 66033, 77088 99955 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow