தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் நடப்பாண்டு தீபாவளி வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.