கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மாடு வளா்ப்பு, பால் பண்ணை அமைத்தல், மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பயிற்சி நிறுவன இயக்குனா் ஜகன்நாத், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, தற்போது, 10 நாள்கள் மாடு வளா்ப்பு, பால் பண்ணை அமைத்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வரை உள்ள இளைஞா்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சியும், உபகரணங்களும் இலவசமாகவும், முடிவில் தோச்சி சான்றிதழும் வழங்கப்படும்.
வங்கிக் கடனுக்கான ஆலோசனையும் வழங்கப்படும். இணையதள முகவரியில் படிவத்தை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இயக்குனா், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி, தொலை பேசி, 04343-240500, 9442247921, 9488874921, 9080676557 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.